உலகில் சுமார் 1 மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர். அதில் பாதி பேர் சிரியாவில் தான் உள்ளனர். இந்நிலையில் தெற்கு சிரியாவின் ஸ்பீடா பகுதியில் சிறுபான்மை இன ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் மக்களுக்கும், சன்னி பெடோயின் இடையே சமீப காலங்களாக கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத மோதல்கள் அதிகரித்தன. ஏற்கனவே சிரியாவில் உள்ள ட்ருஸ் மக்களை பாதுகாப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இருப்பினும் தாக்குதல்கள் தீவிரமடைந்த காரணத்தினால் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கார்ட்ஸ் ஒரு சமூக ஊடகப் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
Footage shows the moment of the Israeli airstrike in Damascus a short while ago. https://t.co/x08ISPkg1R pic.twitter.com/4fifRF0eNV
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 16, 2025
அந்த அறிவிப்பில் “டமாஸ்கஸ் எச்சரிக்கைகள் முடிந்து விட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்” எங்களது ராணுவம் கடுமையான தாக்குதல்களை தொடரும் என கூறியிருந்தார். மேலும் நானும் பிரதமர் நெதன்யாகுவும் இதற்கு உறுதி எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்தப் பதிவை அடுத்து இஸ்ரேல் ராணுவம் டமாஸ்கஸ்ஸின் மையப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஒரு அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது குண்டு விழுந்து வெடித்தது.
அதே பகுதியில் நேரடி ஒளிபரப்பில் இருந்த தொகுப்பாளர் ஒருவர் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் நிகழ்ச்சியை விட்டு நடுவிலேயே எழுந்து ஓடிவிட்டார். இது குறித்த வீடியோவையும் கார்ட்ஸ் பகிர்ந்துள்ளார். இது தற்போது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
