ஒடிசா மாநிலம் தொனபல் கிராமத்தில் படிப்பந்து சாஷு (81) – சாந்தி சாஷு (72) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஹிமான்ஷா (55). ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடி போதைக்கு அடிமையான ஹிமான்ஷா அடிக்கடி வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருடைய மனைவி தனது குழந்தைகளுடன் தனியே வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது ஹிமான்ஷா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் அங்கேயும் குடித்துவிட்டு வந்துள்ளார். அனுதினமும் குடித்து வந்ததால் அவருடைய பெற்றோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இமான்ஷா அதிக அளவு மது குடித்த நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்த நிலையில் அவருடைய பெற்றோருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் கோபமடைந்த ஹிமான்ஷா அருகிலிருந்த சுத்தியலை எடுத்து தாய், தந்தை இருவரையும் தாக்கி கொலை செய்து விட்டு அவர்கள் அருகிலேயே உறங்கியுள்ளார். மறுநாள் காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹிமான்ஷா பெற்றோரின் உடல்களை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹிமான்ஷாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
