டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் வசித்துவந்த விகாஸ் என்ற இளைஞர், வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நிலவரத்தை உலுக்கியுள்ளது. தற்கொலைக்கு முன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர், கடன் சுமை, குடும்பம் மற்றும் தனது நான்கு வயது மகனின் எதிர்காலத்தை பற்றிய கவலைகளை உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தனது மனைவி குழந்தையுடன் வீட்டை விட்டு சென்றதாகவும், ஷாகிப் என்ற நபருடன் அவர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தேகம் மற்றும் கடன் பிரச்சனைத் தான் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டிவைத்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்கொலைக்கான காரணங்களை விளக்கும் விதமாக, “நான் என் மனைவியை நேசிக்கிறேன், ஆனால் அவளிடம் நான் தவறாக நடந்துகொண்டதையும் ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும், மக்கள் என்னை மட்டும் தவறானவனாக நினைக்கிறார்கள். என் மனைவி சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார், ஷாகிப்புடன் நெருக்கமாக இருந்துள்ளார்” என்று அவர் வீடியோவில் கூறியுள்ளார். மேலும், தனது இறுதி விருப்பமாக, தனது நான்கு வயது மகனை தனது பெற்றோர்கள் பராமரிக்க வேண்டும் என்றும், மாமியார் வீட்டில் வளர்க்கப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மனைவிக்கும் அவருடைய தாயாருக்கும் நிலையான வருமானம் இல்லாததால் குழந்தைக்கு உரிய பராமரிப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் விகாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னால் இருந்து விகாஸ் ஒரு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ ஆதாரத்தை விசாரணைக்காக கைப்பற்றியுள்ள போலீசார், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனைகள், நம்பிக்கையிழப்பு மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஒருவரை எந்தளவுக்கு முடிவெடுக்கச் செய்யக்கூடும் என்பதை வெளிக்கொணரும் இச்சம்பவம், சமுதாயத்தில் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது.