புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டக் களத்திற்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார். தற்போதைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், மாணவர்களின் நலனுக்காக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், போராட்டக் களத்தில் இருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சௌரவ் தாஸ் தனது ஆதரவாளர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு காபி குடித்துக்கொண்டிருக்க, அவருக்குப் பின்னால் ஒரு நபர் சுவரொட்டி (Poster) போன்ற ஒரு பொருளால் விசிறி விடுகிறார்.
இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பலரும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகப் போராடுவதாகக் கூறும் இவர்களின் உண்மை முகம் இதுதான் என்றும், ஒரு சாதாரண வெயிலைக் கூட தாங்க முடியாமல் தனக்கு விசிறி விட ஒரு ஆளை வைத்துள்ளார் என்றும் சௌரவ் தாஸைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
Look at this video…
CJP chief spokesperson Saurav Das has brought a servant along just to fan him because it’s too hot outside.
These are the same people who claim to be fighting for equality and social justice…. pic.twitter.com/CgUQwBHeqC— Mr Sinha (@Mrsinha) June 6, 2026
“>
திராவிட ஜனதா யுவ மோர்ச்சா செயலாளர் தஜிந்தர் பக்காவும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
