உத்திர பிரதேச மாநிலம், ஹிலாக் கிராமத்தில் விவசாயி பிரேம்சந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியுள்ளது. இதனால் பிரேம்சந்த் வரும் வன விலங்குகளை விரட்டுவதற்காக தோட்டத்தில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில் எப்போதும் போல நேற்று இரவு பிரேம்சந்த் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம கும்பல் ஒன்று தோட்டத்திற்குள் நுழைந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அவரை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் பிரேம்சந்த் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்து விட்டார். இதைத்தொடர்ந்து காலை பிரேம்சந்த் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது பிரேம்சந்த் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரேம்சந்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவசாயியை தோட்டத்திற்குள் நுழைந்து அடித்து கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி தரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
