உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள ரிஸ்பனா பாலத்தில் நேற்று (புதன்கிழமை) மாம்பழம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரி கவிழ்ந்ததையடுத்து, நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன.
சம்பவத்தின் வைரல் வீடியோவில், மக்கள் பலர் பைகள், கூடைகள், மூட்டைகள் வைத்துக் கொண்டு மாம்பழங்களை அள்ளி எடுத்துக்கொண்டு செல்வது காணப்படுகிறது. அந்த இடம் ஒரு சந்தையைப் போல மாறி, மாம்பழ கண்காட்சி போலவே இருந்தது என எக்ஸ் பயனர் பூபி பன்வார் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
देहरादून के रिस्पना पुल पर एक आम से लदा ट्रक पलट गया। हादसे में किसी को चोट नहीं आई, मगर सड़क पर बिखरे रसीले आमों ने कुछ लोगों की आँखें चमका दीं। आपदा को अवसर बनाते हुए, कई लोग टोकरी-थैले लेकर आम लूटने में जुट गए, मानो मुफ्त का मेला लग गया हो! pic.twitter.com/NTqz8n4DpR
— bhUpi Panwar (@askbhupi) July 16, 2025
“விபத்து ஒரு வாய்ப்பாக மாறி, மக்கள் வெறிச்சோடிய சாலையை ஒரு இலவச சந்தையாக மாற்றினார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “விபத்து நேரத்தில் கூட மனிதநேயம் இல்லாமல் பழங்களை அள்ளிச் செல்வது நாகரிகமற்றது”, “இந்தியாவில் இப்படி நடக்கிறதால்தான் வளர்ச்சி தடைபடுகிறது” என்ற விமர்சனங்கள் வந்துள்ளன.
விபத்தால் போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டது என ஏ.பி.சி நியூஸ் தெரிவித்துள்ளது. போலீசார் விரைந்து வந்து பழங்களை அகற்றி, நிலையை கட்டுப்படுத்தினர். சமீபத்தில் இதேபோன்று ஆந்திர மாநிலத்தில் மாம்பழம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் பழ மூட்டையின் மீது அமர்ந்திருந்ததால் கவிழ்ந்த போது நசுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு, பழங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது.
