மகாராஷ்டிரா மாநிலத்தின் விக்ரோலி மற்றும் வசாய் பகுதிகளில் மராத்தி சமூகத்தை அவமதிப்பதாகக் கூறி, இரண்டு தனித்தனியான சம்பவங்களில் கடைக்காரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை எம்என்எஸ் மற்றும் சிவசேனா (UBT) கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விக்ரோலியில், மராத்தி சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டதாகக் கூறி ஒரு கடைக்காரரை எம்என்எஸ் தொண்டர்கள் கடையில் புகுந்து தாக்கினர். “நாங்கள் மார்வாடிகள், எங்களிடம் யாரும் நிற்க முடியாது” என்றறு கூறியது அவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, கடைக்காரர் கூப்பிய கைகளுடன் மராத்தி மக்களிடம் மன்னிப்பு கேட்பது, தன்னை மன்னிக்குமாறு கெஞ்சுவது போன்ற காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் முன், சந்தை வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராத்தி அடையாளத்தை அவமதிப்பவர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என எம்என்எஸ் பிரிவுத் தலைவர் விச்வஜித் தோலம் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், ஜூலை 12ஆம் தேதி விரார் ரயில் நிலையம் அருகே, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜு பட்வா “நான் இந்தி பேசுவேன், போஜ்புரி பேசுவேன், ஆனால் மராத்தி பேச மாட்டேன்” என்ற வீடியோ வெளியானதால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினார். அவரது பேச்சால் சண்டை வெடித்தது. பின்னர், சில பெண்கள் உட்பட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை பொதுமுறையில் தாக்கினர். வீடியோவில் அவர் கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்பது தெரிய வருகிறது. தற்போது, இந்த இரு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டவிரோதக் கூடும், கலவரம் உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
तुम्ही इथे येऊन अशी भाषा वापराल तर तुम्हाला त्याच भाषेत उत्तर मिळणार. तुला कोलला ! pic.twitter.com/xSGFk201Ts
— MNS Videos (@mnsvideos) July 16, 2025
