இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தின் கோஹர் பகுதியில் ஜூன் 30ஆம் தேதி இரவு நடந்த திடீர் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஒரு குடும்பம் முழுவதும் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபகரமான சம்பவம் நிகழ்ந்தது. இதில், 11 மாத குழந்தையான நித்திகா மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார். அந்தக் குழந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் உள்ளங்களையும் வருடியது.
தல்வாரா கிராமத்தில் நடந்த இந்த நிகழ்வில், நித்திகாவின் பெற்றோர் ரமேஷ், ராதா மற்றும் பாட்டி பூர்ணு தேவி ஆகியோர் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனனர். வீடின் உள்ளே தனியாக இருந்த நித்திகா, எந்த காயமும் இல்லாமல் உயிர் பிழைத்தார். ஜூலை 1ஆம் தேதி குழந்தையின் அழுகையை கேட்டு உள்ளூர் மக்கள் அவரை மீட்டனர். ஜூலை 2ஆம் தேதி ரமேஷின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் அவரது மனைவியும் தாயாரும் இன்னும் காணப்படவில்லை. நித்திகாவின் கதையைப் பற்றிய வீடியோவிலும், அதிகாரி ஒருவர் குழந்தையுடன் விளையாடும் காட்சிகளும் வைரலாகி உள்ளன.
मासूम ने अभी “माँ” बोलना भी नहीं सीखा, लेकिन इसकी माँ अब इस दुनिया में नहीं रही। वो अब कभी अपने पिता की उंगली पकड़कर चलना नहीं सीखेगी, क्योंकि उसके पिता भी इस त्रासदी में हमेशा के लिए चले गए।
प्राकृतिक आपदा ने मेरे सराज को कई ऐसे जख्म दिए हैं, जो जिंदगीभर नासूर बनकर रहेंगे।
ऐसा… pic.twitter.com/8aEyP0lzll
— Jairam Thakur (@jairamthakurbjp) July 11, 2025
இந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்தக் குழந்தையை தத்தெடுக்க முன்வந்துள்ளனர். ஆனால், தற்போது நித்திகாவின் பராமரிப்பை அவரது தந்தையின் சகோதரி கிர்னா மேற்கொண்டு வருகிறார். குழந்தையின் எதிர்கால நலனுக்காக நிர்வாகம் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நித்திகாவை நேரில் சந்தித்து தனது உணர்ச்சியை பகிர்ந்துள்ளார்.
