திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்கொடியைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற லிபி (53) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இறந்த பெண்ணை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகிலிருந்து இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பழவூர் அருகே கொண்டு வந்தது தெரிய வந்தது. இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அமல்ராஜ் தாக்கியதில் மூச்சுத்திணறு ஏற்பட்டு அந்தப் பெண் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்தப் பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டு அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் எந்த ஒரு தடயங்களும் இல்லாத நிலையில் சிசிடிவி பதிவுகளில் கிடைத்த சிறு தகவலை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு இறந்த நபரின் அடையாளமும் காணப்பட்டது.