குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு தினமும் பயணிகள் விமானம் செல்வதுண்டு. இந்நிலையில் லண்டனுக்கு செல்லும் விமானம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை விமான சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏர் இந்தியாவின் போயிங் விமானம் அகமதாபாத்தில் இருந்து காட்விக்கிற்கு புறப்பட்ட சில வினாடிகளில் அரசு மருத்துவமனை கல்லூரி வளாக விடுதி மீது மோதி வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
