ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பி கனிபள்ளி கிராமத்தில் முன்னப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம்மா மற்றும் முனியம்மா என்ற 2 மனைவிகள் இருக்கிறார்கள். இதில் ஞானமாவுக்கு சுரேஷ் என்ற ஒரு மகனும், முனியம்மாவுக்கு 2 மகள்கள் மற்றும் மஞ்சுநாத் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் முன்னப்பா கடந்த 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது. தந்தை உயிரிழந்ததால் மூத்த மனைவி ஞானமாவின் மகன் சுரேஷ் தந்தையின் இரண்டாவது மனைவி ஞானம்மா பிள்ளைகளுடன் வந்து விடுவார் என நினைத்துள்ளார்.

இதன் காரணமாக தன் தாயாருடன் சேர்ந்து சுரேஷ் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி சுரேஷ் தன் தாயாரை ஊரின் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்தார். பின்னர் அவர் மஞ்சுநாத் தன்னுடைய தாயாரை மின்கம்பத்தில் கட்டி வைத்ததாக ஊர்காரர்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சொத்தை அபகரிக்க தாயும் மகனும் சேர்ந்து போட்ட திட்டம் என்பது தெரிய வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து போலீஸ் சார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.