டெல்லி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமான நிலையத்திற்கு சொந்தமான ஒரு விமானம் கிளம்ப தயாராக இருந்தது. இதற்காக பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்த நிலையில் விமானம் ஓடுதளம் பகுதிக்கு புறப்பட இருந்தது. அப்போது அந்த விமானத்திலிருந்து இருந்த 2 பயணிகள் காக்பிட் அறைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அந்தப் பயணிகளை இருக்கியில் இருக்கையில் அமருமாறு விமான சிப்பந்திகள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து இடையூறு அளிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதை அடுத்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த வீரர்கள் பயணிகள் இருவரையும் விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதற்கிடையில் 12:30 மணிக்கு புறப்பட இருந்த விமானம் இரவு 7:21 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.