ஹைதெராபாத் மாநிலம் நம்பள்ளியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் கிரிக்கெட் பந்தை எடுக்க நுழைந்த உள்ளூர்வாசி ஒருவர் எதிர்பாராத வகையில் கண்டெடுத்த மர்மமான எலும்புக்கூடுகள், தற்போது பத்தாண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த அமீர் கான் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், முக்கிய திருப்புமுனையாக அமைந்தது ஒரு பழைய நோக்கியா கைபேசி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமீர் கான் (50), திருமணமாகாதவராகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருந்தவர். தனது தந்தை முனீர் கானுக்குச் சொந்தமான வீட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தார். சமையலறையில் முகம் குப்புற கிடந்த நிலையில், உடலை சுற்றி பழைய பாத்திரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் இது பயங்கரமான விபத்து என கருதப்பட்டது.

 

ஆனால் தொடர்ந்து நடந்த விசாரணையில், இது இயற்கையான மரணம் என்றும், நீண்ட காலமாக யாரும் அவரை பார்க்க வராததால் இது யாருக்கும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். முக்கியமாக, உடல் அருகே பழைய நோக்கியா கைபேசி ஒன்று காணப்பட்டது. செயலிழந்திருந்த போனில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு 84 தவறவிட்ட அழைப்புகள் இருந்ததை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

இது, அமீர் கான் இறந்த காலத்தை கணிக்க முக்கிய ஆதாரமாக அமைந்தது. மேலும், தலையணையின் கீழ் பதுக்கப்பட்டிருந்த, தற்போது செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள், அவர் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே இறந்துவிட்டதாகவும் காட்டியது.

“போராட்டம் அல்லது காயம் ஏற்பட்ட எந்த அறிகுறியும் இல்லை. எலும்புகள் நொறுங்கத் தொடங்கிய நிலையில் இருந்தன” என உதவி காவல் ஆணையர் கிஷன் குமார் தெரிவித்தார். அமீர் கானின் தம்பி ஷதாப், உடலில் இருந்த மோதிரம் மற்றும் ஷார்ட்ஸைப் பார்த்து, உடலை உறுதிப்படுத்தினார். தற்போது, துப்பறியும் குழு மேலதிக ஆதாரங்களை சேகரித்து, எலும்பு கூடுகள் பிணவறையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், தனிமையிலும் மனநலம் பாதிப்புடனும் வாழும் நபர்களுக்கு அருகிலுள்ளவர்களால் ஏற்பட வேண்டிய கவனமே முக்கியம் என்பதைப் பதிவு செய்கிறது. சுட்டி விஷயமாக தோன்றிய ஒரு