கேரளாவில் உள்ள காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் குரு பூர்ணிமா பூஜை நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பள்ளியின் மூத்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.  இந்த சம்பவம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ”மாணவர்கள் பாத பூ”ஜை செய்வது அடிமைத்தனம் போன்றுள்ளது” என்று கல்வி அமைச்சர் சிவன் குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது நம் கலாச்சாரமில்லை,சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இவரின் கருத்திற்கு மாநில ஆளுநர் ராஜேந்திரர் அர்லேக்கர் “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செழுத்துவது நமது கலாச்சாரமாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எந்த கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு கேள்வியை எழுப்பியெள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் கல்வி அமைச்சரின் எதிர்ப்புக்கு கொடுத்த விளக்கம் தற்போது பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.