நாமக்கல் மாவட்டம் வடகரை ஆத்தூர் பகுதியில் சிவ சண்முகம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதன் காரணமாக திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடி வந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தீபா (30) என்ற பெண்ணுடன் திருமண புரோக்கர்கள் சிவ சண்முகத்திற்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

திருமணத்திற்காக ப்ரோக்கர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் தீபாவுக்கு வரதட்சணையாக சிவ சண்முகம் ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். அவர்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் திருமணம் நடைபெற்ற நிலையில் பின்னர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சிவசண்முகம் சொந்த ஊருக்கு வந்த நிலையில் திருமணமான இரண்டாம் நாளில் அதாவது கடந்த 8-ம் தேவி சிவசண்முகம் தன்னுடைய புது மனைவியை அக்கா மலர்கொடி வீட்டிற்கு விருந்திற்காக அழைத்து சென்றுள்ளார்.

அப்போது மறுநாள் காலை திடீரென தீபா காணாமல் போன நிலையில் உறவினர்களும் சிவ சண்முகமும் பல இடங்களில் அவரை தேடி உள்ளனர். தீபாவின் செல் போன் மற்றும் திருமண புரோக்கர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் என இருந்ததால் விரக்தி அடைந்த சிவ சண்முகம் தூக்கிட்டு தன் அக்கா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தீபா ஏற்கனவே வரதட்சணையாக பணம் பெற்ற நிலையில் திருமணத்திற்காக எடுத்த பட்டுப்புடவை மற்றும் 8 தவரன் தங்க தாலிக்கொடி போன்றவைகளுடன் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது. இவரையும் திருமண புரோக்கர்கள் ஆறு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தீபா இதே போன்று பலரை திருமணம் செய்து ஏமாற்றி எடுக்கும் கல்யாண ராணியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.