அக்கா- தங்கை பாசம் என்பது உணர்வு ரீதியான தொடர்பு ஆகும். ஒரே வீட்டில் உள்ள சகோதரிகள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் பலம் பலவீனங்களை தெரிந்து வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் உதவி செய்வதுமாக வளர்வார்கள்.

அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று தனது அக்காவை காப்பாற்றுவதற்காக சிறு குழந்தை செய்த காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், ஒரு சிறுமியிடம் அவரது தந்தை கோபமாக பேசிக்கொண்டு உள்ளார்.

அதனை கவனித்த அந்த சிறுமியின் தங்கை அப்பாவின் கோபத்தை திசை திருப்புவதற்காக முதலில் உட்கார வைக்கிறது.  பின்னர் அவருக்கு குடிப்பதற்கு கொண்டு வந்து கொடுக்கிறது.

அதனையடுத்து கையில் உள்ள பொருளை வாங்கிவிட்டு அதற்கு பதிலாக தின்பண்டத்தை கொடுத்து அப்பாவை சமாதானம் செய்கிறது. பின்னர் மெதுவாக அவரது அக்காவை தந்தையிடமிருந்து காப்பாற்றி அழைத்துக் கொண்டு செல்கிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சமூக வலைதளப் பயனர்கள் நகைச்சுவையாக இருந்தாலும் அக்கா- தங்கையின் பாசத்தின் வெளிப்பாடு என நெகிழ வைக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.