பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் சொல்லுவாங்க. ஆனால் இன்றைய கால குழந்தைகள் பாம்புகளை வீட்டில் வளர்ப்பது. அதனுடன் விளையாடுவது, கொஞ்சவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், இரு குழந்தைகள் போனை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அப்போது அருகே உள்ள ஒரு மர சிறு வீட்டில் இருந்து மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அவர்கள் அருகே செல்கிறது.

அதனை கவனித்த சிறுவர்களில் ஒருவர் ஏதோ பூனைக்குட்டியை போன்று “இங்கே வா” என கூப்பிடுகிறார். அந்தப் பாம்பும் மெல்ல மெல்ல நகர்ந்து  அந்த குழந்தையின் அருகே சென்று அதன் கையை தொட்டு விளையாடுகிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது போன்ற ஆபத்தான மிருகங்களை வீட்டில் வளர்ப்பது பாதுகாப்பு குறித்த கேள்வியை சமூகத்தில் எழுப்புகிறது.