பொதுவாக சிறு குழந்தைகளும், விலங்குகளும் அப்பாவித்தனமாக செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியான தருணங்களையும் வழங்கக்கூடியது. இயல்பாகவே குழந்தைகளும், விலங்குகளும் விளையாட்டுத்தனமாக இருப்பதால் சுதந்திரமாக தங்களது செயல்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று சிறுமி ஒருவர் விளையாட்டுத்தனமாக தனது செல்லப் பிராணிக்கு செய்யும் செயல் பார்ப்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வீடியோவில் சிறு பெண் குழந்தை ஒன்று தனது செல்லப் பிராணியான கோழிக்கு காலில் உள்ள நகங்களுக்கு நெயில் பாலிஷ் அடித்து மகிழ்கிறது.

அந்த கோழியும் சிறுமிக்கு ஏற்றவாறு அமைதியாக பொறுமையாக நெயில் பாலிஷ் அடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் குழந்தைக்கும், விலங்குக்கும் இடையேயான உணர்ச்சி பூர்வமான பந்தத்தை எடுத்துக்காட்டுவதாக பல்வேறு மகிழ்ச்சியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.