சமூக வலைதளங்களில் மனிதர்கள் விலங்குகளை காப்பாற்றுவதும், விலங்குகள் மனிதர்களை காப்பாற்றுவதுமான பல வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதேபோன்று சமீபத்தில் கால்வாயில் விழுந்த நாயை துரிதமாக செயல்பட்டு இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அந்த இளைஞர் கால்வாய் சரி செய்வதற்காக மண்வெட்டியுடன் அருகில் நின்று கொண்டிருக்கிறார். திடீரென திரும்பி பார்த்தபோது அந்த கால்வாயில் நாய் ஒன்று அடித்து செல்லப்பட்டதை கண்டதும் உடனே யோசிக்காமல் மண்வெட்டியால் அந்த நாயை நீரில் அடித்து செல்லாமல் தடுத்து நிறுத்தி மேலே தூக்கி கால்வாயை விட்டு வெளியேற்றினார்.

பின்னர் அந்த நாய் வேகமாக அங்கிருந்து விட்டு ஓடியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சமூக பயனர்கள் பலரும் அந்த இளைஞரின் துணிச்சலான துரிதமான செயலை பாராட்டி வருகின்றனர்.