இன்றைய கால இளைஞர்கள் பொழுதுபோக்குக்காக மற்றும் அதிக லைக்குகளை பெறுவதற்காக தண்டவாளங்களில் ஸ்டன்ட் வீடியோக்கள் செய்வது, படப் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்ற தங்கள் உயிரை பணயம் வைக்கும் செயல்களை செய்கின்றனர்.
அதுபோன்று ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி செய்யும் ஆபத்தான செயல்களால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் அபாயங்கள் உள்ளது. அதேபோன்று சமீபத்தில் ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டு இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோக்கள் ரயில் மணிக்கு 55 மைல் வேகத்தை தாண்டி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே காலை வைத்துக் கொண்டு இந்தி பட பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் வீடியோ எடுக்கிறார். ரயில் வரும் வேகத்தில் முதலில் திடீரென கீழே சாய்ந்த அந்த இளைஞர் மீண்டும் எழுந்து நின்று வீடியோவை தொடர்கிறார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சமூக வலைதளப் பயனர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற அபாயங்கள் குறித்து ரயில்வே துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதுபோன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடுவது குறித்த ஆபத்தான பின் விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை இந்த வீடியோ எடுத்துக்காட்டியுள்ளது.
