திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் ஆத்து மேடு அய்யனார் நகர் பகுதியில் முனியப்பன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி (25) என்ற மனைவியும்,  8 வயதில் சாரா ஸ்ரீ என்ற மகளும், 2 வயதில் துரைப்பாண்டி என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் பாத்திரம் வியாபாரம் செய்கிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முனியப்பன் பாத்திரம் வியாபாரம் செய்வதற்காக வெளியே சென்று விட்ட காயத்ரி குழந்தைகளுடன் வீட்டிலிருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த துரைப்பாண்டி தவறுதலாக தண்ணீர் அண்டாவில் தலைக்கு பிற விழுந்துவிட்டான். இதனால் குழந்தையால் மேலே வர முடியாத நிலையில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதற்கிடையில் வீட்டில் வேலைகளை முடித்த காயத்ரி குழந்தையை காணவில்லை என வீடு முழுவதும் தேடிய நிலையில் பின்னர் உறவினர்கள் வீட்டில் தேடியுள்ளார். பின்னர் எதார்த்தமாக தண்ணீர் அண்டாவில் கால்கள் தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தன் குழந்தையை பார்த்தார். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.