
சென்னை பூந்தமல்லி பகுதியில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் நிலையில் சிலர் மதிமுக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். எத்தனையோ துரோகங்கள் இருந்த போதிலும் அத்தனைக்கும் மத்தியில் கடந்த 31 வருடங்களாக நான் மதிமுகவை கட்டிக் காத்து வருகிறேன்.
ஒருமுறை கடலில் விழுந்த போது காப்பாற்றினார். மற்ற 2 முறை மதிமுகவை அவர் எப்போது காப்பாற்றினார் என மல்லை சத்யாவை நோக்கி கேள்வி எழுப்பினார். நான் திருச்சி மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்தது தான் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. நாங்கள் எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் மட்டுமே நீடிப்போம் திமுகவின் வெற்றிக்காக மட்டுமே பாடுபடுவோம். இது என்னுடைய கட்டளை என்று கூறினார்.
மதிமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடைய பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு துரை வைகோ சென்றார். இந்த விவகாரம் மதிமுகவில் பூதாகரமாக வெடித்த நிலையில் சமீபத்தில் வைகோ முன்னிலையில் இருவரும் கைக்குழுக்கு மீண்டும் சமாதானம் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.