ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது இந்தியா அதனை வீழ்த்தியது. இதனால் எல்லை பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் போன்ற எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதாவது ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ராஜோரி மாவட்டத்தில் அத்துமீறிய பாகிஸ்தான், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய இறையாண்மையை பாகிஸ்தான் சீர் குலைக்க முயற்சி செய்து வருவதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.