தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோ விஷ்வா என்ற 14 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தான்.
இந்நிலையில் சம்பவ நாளில் ஜோ விஷ்வாவுக்கு அவருடைய அண்ணனுக்கும் இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜோ விஷ்வாவை அவருடைய தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோ விஷ்வா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
