
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8755 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலைகளும் மாற்றும் இன்றி ஒரு கிராம் 9550 ரூபாய்க்கும், ஒரு சவரன் 76400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 108000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.