தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் த்ரிஷா. இருபது வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாக தக்கவைத்துக் கொண்டு இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வளம் வருகிறார். மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்த த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகையாகவே கொண்டாடப்பட்டு வருகிறார் .சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்1, பொன்னியின் செல்வன் 2, லியோ படங்களில் நடித்து பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூலையும் வாரி குவிக்க வைத்தது அந்த படங்கள்.

கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். தற்போது 41 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக கூட காதலே வெல்லும் என்ற பதிவை போட்டு இருந்தார். இதனால் அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பள்ளி உடையில் தனது தோழிகளோடு அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.