சாதாரண மக்களுடைய பெரும்பாலான கனவு என்னவென்றால் சொந்த வீடு மற்றும் நில வாங்குவது தான். ஆனால் பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சிலர் வீடு கட்டுவதற்கு வீட்டு லோன்களை நம்பி இருந்தாலும் அவற்றுக்கு வட்டிகட்டியே வாழ்நாள் முழுவதும் செலவாகிவிடும். இதனால் கடன் வாங்கலாமா? வேண்டாமா? என்று யோசனையில் தான் அவர்களுடைய காலமே நகர்ந்து வருகிறது. எனவே கடன் வாங்காமல் வீடு கட்டுவது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.

50 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்க முன்பணமாக 10 லட்சம் கொடுக்க வேண்டும். மீதமுள்ள தொகையை நாம் கடனாக வாங்க வேண்டும்.  ஆனால் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் 10 லட்சத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 15 சதவீத வட்டி விகிதத்தில் பத்து வருடங்களுக்கு 40 லட்சம் வருமானம் நமக்கு கிடைக்கும். 40 லட்சம் கடன் வாங்கும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்கு 36,000 வட்டி செலுத்த வேண்டும். அதையும் சேமித்தால் 68 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். எனவே பத்து வருடங்களில் சேமிப்பு பணமாக ஒரு கோடி ரூபாய் கையில் இருக்கும். அதை வைத்து கடன் இல்லாமல் வீடு வாங்க முடியும்.