தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற பெயரில் சாக்லேட் வடிவில் இருக்கும் அந்த போதை பொருளை வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதில் மெத்த பெட்டமின் என்ற போதை பொருள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்கள் ஸ்ட்ராபெரி வாசனையுடன் இருக்கும் இந்த போதைப்பொருளை சாக்லேட் என நினைத்து வாங்கி சாப்பிட்டு விட்டால் தொடர்ந்து போதைக்கு அடிமையாகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த போதைப்பொருள் பல்வேறு சுவைகளிலும் கிடைக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறார்கள்.

மேலும் போதை பழக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் அருகில் யாரும் எந்தவித சாக்லேடுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.