அகமதாபாத்தில் நடைபெற்ற Gold Play கச்சேரியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரபல பாடகர் கிறிஷ் மாட்டின் மற்றும் அவருடைய குழுவினர் நடத்திய பிரம்மாண்ட இசை கச்சேரியை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த இசை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவும் கலந்து கொண்டார். அப்போது அவரை புகழ்ந்து பாடகர் கிறிஸ் மார்டின் பாட்டு பாடினார்.

அதாவது ஜஸ்ப்ரித், ஓ மை பியூட்டிஃபுல் பிரதர், தி பெஸ்ட் பவுலர் இன் ஓல் ஆஃப் கிரிக்கெட், வி டு நாட் என்ஜாய் வாட்சிங் யூ டேஸ்ட்ராய் இங்கிலாந்து என பாடினார். அப்போது இங்கிலாந்துக்கு எதிரான பும்ராவின் ஆட்டம் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது. உடனடியாக ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதோடு பும்ராவும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். மேலும் இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.