இந்திய டி20 கிரிக்கெட் அணியில் வெறும் 15 வயதிலேயே இடம்பிடித்து உலகையே வியக்க வைத்துள்ள இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு, சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி புயல் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆகியோர் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையையும், பயமற்ற ஆட்டத்தையும் வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

அவருடைய தேர்வு குறித்துப் பேசிய டி வில்லியர்ஸ், “அவர் இன்னும் சிறிய பையன், பக்குவம் வரவில்லை என்று கூறி அனுபவமுள்ள வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாம், ஆனால் அவர் தனது அபார திறமையால் இந்திய அணியின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்” என்று நெகிழ்ந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஷேன் வாட்சன், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிடும் சூர்யவன்ஷியின் பவர்-ஹிட்டிங் திறன் தனித்துவமானது என்று பாராட்டியதுடன், அவுட் ஆகிவிடுவோம் என்ற பயம் அவரிடம் துளியும் இல்லாத அந்த பயமற்ற அணுகுமுறைதான் 15 வயதிலேயே அவரை இவ்வளவு சிறப்பான வீரராக மாற்றியிருக்கிறது என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
