சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று ஐபிஎல் ஏலம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் எடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கிய நிலையில், பந்து வீச்சாளர்களை ஒவ்வொரு அணியும் பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கி வருகிறது. இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்திய வீரர் தேவதத் படிக்கல்லை 2 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
