இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரை பதிவு செய்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை.
இதற்கு முன்பு வரை அதாவது கடந்த ஐபிஎல் சீசன் வரை மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1.85 கோடி ரூபாய் மீதம் இருக்கும் நிலையிலும் அவரை ஏலத்தில் வாங்க முன்வரவில்லை.
