அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளை பற்றி திமுக அரசுக்கு கவலையை கிடையாது. திமுக அரசு விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது என்பதை திமுகவின் நோக்கமாக இருக்கிறது.

50 ஆண்டு காலமாக காவிரி நதிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும். கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்து விடுவது மட்டும் வேலை கிடையாது. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்வது முக்கியம். விவசாயிகள் காலில் அணிவதற்கு காலணி கூட இல்லாத நிலைமையில் பல கோடி ரூபாய் செலவு செய்து கார்பந்தயம் நடத்துவது தேவையா? நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷ காளான் உதயநிதி.

அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவை புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கையாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நாவடக்கம் தேவை செல்வ செழிப்பில் வளர்ந்த உங்களுக்கு இவ்வளவு திமிர் என்றால் உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்றால் உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். ரெய்டை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவிற்கு இருக்கிறது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என கூறியுள்ளார்.