அதிமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது அவர் ஆர் எஸ் எஸ் பேரணியை தொடங்கி வைத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரை அதிமுக தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது.

அவரை தற்காலிகமாக நீக்கி 40 நாட்கள் ஆணை நிலையில் தற்போது மீண்டும் அதிமுக அவரை கட்சியில் இணைத்துள்ளது. மேலும் அவருக்கு கட்சியில் மீண்டும் அதே கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.