கோயம்புத்தூரில் பழனிச்சாமி- வக்தசலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இறந்த நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அந்த சிறுவன் இறந்துவிட்டான். இதனால் மிகுந்த மன வேதனையில் பழனிசாமி மற்றும் வக்தசலா இருந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் கணவன் மனைவி இருவரும் திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். அவர்களுடைய உடலை காட்டூர் காவல்துறையினர் மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மகன் உயிர் இழந்த சோகத்தில் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
