கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து மம்தா பானர்ஜி அவர்களை குற்றம் சுமத்தி பதவி விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பெண் மருத்துவரின் தந்தை மம்தா பானர்ஜி மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அதாவது 2021 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வரான சந்திப் கோஸ் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததாகவும் அந்த சமயத்தில் அவர் மீது மம்தா பானர்ஜி தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகள் தற்போது உயிரோடு இருந்திருப்பாள் என்று கூறியுள்ளார்.