தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை.

அதன் பிறகு திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.