சென்னையில் வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு போக்குவரத்து காவல்துறை தரப்பில் வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க நோ பார்க்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வாகனங்களை நிறுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
