தமிழக மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மின் கட்டணம் ரூ.5000-க்கு மேல் வந்தால் இனி ரொக்கமாக செலுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 20 ஆயிரத்துக்கும் மேல் கரண்ட் பில் வந்தால் ரொக்கமாக செலுத்தக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில் பின்னர் அது 10,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது அது ரூ.5000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கரண்ட் பில் ரூ5000-க்கு மேல் வந்தால் இனி காசோலை அல்லது டிடி மூலமாக மட்டும்தான் கரண்ட் பில் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் பொருட்டு இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
