பொதுவாகவே விமான பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு நலனை கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு விமான நிலையங்கள் சிலர் நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் ஏறும்போது பவர் பேங்க், ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதன்படி தற்போது தேங்காயும் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய்களில் அதிக எண்ணெய் சத்து உள்ளது. இதனை பயணிகள் எடுத்துச் சென்றால் அதீத வெப்பத்தால் தீப்பற்றி பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் இனி விமானத்தில் பயணிகள் தேங்காய் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
