மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து பதவி வகித்து வரும் நரேந்திர மோடியை பாராட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ஆற்றி வரும் சேவைகளைப் போற்றும் வகையில், அங்கு குழுமியிருந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் திடீரென தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, பலத்த கரவொலி எழுப்பி தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியில் நீடித்து புதிய சாதனை படைத்து வரும் மோடிக்கு, சொந்த அமைச்சரவை சகாக்களே நாடாளுமன்ற வளாகத்தில் இப்படி எழுந்து நின்று கெளரவம் சேர்த்திருப்பது தேசிய அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
