கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மும்பை தாதர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த GRP காவலர் மாதவ் கெந்த்ரே, 11-வது  பிளாட்பாமில் 2 பேர் மிகவும் கனமான ஒரு பையைதூக்க முடியாமல் கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வதை கவனித்தார். சந்தேகம் அடைந்த காவலர் அவர்களிடம் சென்று, அந்தப் பையை திறக்க கூறியுள்ளார். ஆனால் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் பையை திறக்க மறுத்து வந்தார்.

பின்னர் அவர் பையை திறந்தபோது, அதில் பிணம் ஒன்று பாலிதீன் கவரில் சுற்றப்பட்டிருந்தது கண்டு காவலர் அதிர்ச்சியடைந்தார். அந்த 2 பேரும் துத்தி எக்ஸ்பிரஸ் பயணம் செய்ய திட்டமிட்டதாக தாதர் GRP இன் மூத்த காவல் ஆய்வாளர் தெரிவித்தார். காவலரின் எச்சரிக்கையால் ஒருவர் பிடிபட்டார்.

அந்த நபரின் பெயர் ஜெய் பிரவீன் சவ்சா என்பதும், அவர் மற்றும் இறந்த நபர் காது கேளாதவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், கொல்லப்பட்டவர் அர்ஷாத் அலி (30) என்பதும் தெரியவந்தது. அவர் தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்ததால் அவரைக் கொன்றதாக சவ்சா கூறினார்.

பின்னர் தப்பி ஓடிய மற்றொரு நபர் ஷிவ்ஜித் சுரேந்திர சிங் என்பவர் உல்ஹாஸ்நகரில் இருந்து பிடிபட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு 3 பேரும் பார்ட்டி கொண்டாடியதும் , பின்னர் சவ்சா மற்றும் சிங் இருவரும் அர்ஷாத் அலியின் தலையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

பின்னர் அர்ஷாத் அலியின் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, சூட்கேஸில் வைத்து கொண்டு கான் கொணவுக்கு என்ற இடத்தில் கொண்டு சென்று வீசுவதற்கு திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் காவலரின் எச்சரிக்கையால் அவர்களது திட்டம் தோல்வியடைந்தது. என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.