சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. இவருடைய நடிப்புக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் சின்னத்திரையை விட்டு விலகாமல் ஆளுக்கு ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆல்யாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்களை ஆல்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
