இந்திய அளவில் பிரபலமான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்தான் ஜான்வி கபூர். இவர் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட்டில் உருவாக உள்ள கர்ணா என்ற படத்தில் இவர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜான்வி கபூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் அவர் ஃபுட் பாய்சனிங்கால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. இதனால் அவர் தனது பிரமோஷன் மற்றும் சூட்டிங் பணிகளை கேன்சல் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்தார். ஆனாலும் நிலைமை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ள நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.