தந்தை ஒருவர் பிறந்து பதினைந்து நாட்களை ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிப்பவர் தயாப். இவர் பிறந்து 15 நாட்களே ஆன தன்னுடைய பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தந்தையிடம் விசாரணை செய்ததில் மருத்துவமனை செலவை தாங்க முடியாத காரணத்தின் காரணமாக குழந்தையை சாக்கு முட்டையில் கட்டி புதைத்ததாக தெரிவித்துள்ளார்.
