ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மளிகை பொருட்கள் குறைந்த விலையில் வழங்கபடுகிறது. இதற்கிடையில் புது ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில் ரேஷன் அட்டைக்கு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, புதிய அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில, புதிய ரேஷன் அட்டை ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை எனவும், சிலரது விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, புதிய ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள், உணவு வழங்கல் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்ப எண்ணை வழங்கி சரிபார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
