
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
இதேபோன்று நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென்காசி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.