
மீனவர்களை மீட்டுக் கொண்டு வாரிங்க. ஆனால் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க. ஒவ்வொரு படகும் லட்சக்கணக்கில் இருக்கு. அந்தப் படகை மீட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற குற்றச்சாட்டை மீனவர்கள் வைக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
அதுக்கும் நான் பதில் சொல்றேன். நீங்க மூணாவது கேள்விக்கு போலாம். மீனவர்களுக்கு ஒன்னும் பண்ணலன்னு சொன்னீங்க. பண்ணுனதை சொல்லுறேன். அதை நீங்க ஒத்துக்கல. இரண்டாவது கேள்விக்கு போயிருக்கீங்க... இதையும் நான் சொல்றேன். இதையும் நீங்க ஒத்துக்கிட்டாலும் சரி, ஒத்துக்கிடலனாலும் சரி, இதெல்லாம் நிஜம்.
முதல் முறையா ஃபிஷரீஸ் மினிஸ்டர்ரும், எக்ஸ்டர்னல் அப்பர்ஸ் மினிஸ்டர் ( வெளியுறவுத்துறை அமைச்சரும் ) ரெண்டு பேரும் சேர்ந்த ஒரு கமிட்டி ஃபார்ம் பண்ணி, அவங்களோடு பேசுவதற்கான முறை மோதி அய்யா வந்த பிறகுதான் நம் நாட்டில் இருக்கு.
அதுக்கு முன்னாடி கப்பல் போச்சா, போட்டு போச்சா, மீனவர் வந்தாரா ? மீனவர் உயிரோட வந்தாரா? மீனவர் வரலையா ? இத பத்தி ஒரு திட்டத்தோடு செயல்பட்டதே இல்லை. அந்த செயல்முறை இப்போ ஆக்கத்துல இருக்குறதுனால தான், சில படகுகள் வந்திருக்கு…. இன்னும் நிறைய வரணும்… அதற்கான முயற்சி நடந்துக்கிட்டிருக்கு என தெரிவித்தார்.