
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சி பயணத்தில் உள்ள குறைகளை மாற்றிக் கொள்ள முடியாது, குறைகளை நிறைவு செய்யலாம். குறைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றால், சில சமயம் காலத்தின் ஓட்டத்தில் ரிவைண்டு பண்ணி பார்க்கணும். லைஃப்ல எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இருக்கும். எவ்ரி திங் இஸ் எ எக்ஸ்பீரியன்ஸ் அப்படின்னு நான் எடுத்துப்பேன்….
தோல்வியே ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான்….. அந்த எக்ஸ்பீரியன்ஸ்ல இதெல்லாம் செய்திருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று பார்த்து, இனிவரும் காலங்களில் அதை தவிர்த்து விட்டு முன்னேறி செல்ல வேண்டும் என்று நினைப்பேன் என கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் மேஜர் தவறாக எதை நினைக்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார்,
இதில் எதுவுமே தவறு கிடையாது. மனித வாழ்க்கையில் தவறு செய்வது மனித இயல்பு. இந்த மாதிரி தவறு நடக்க தான் செய்யும். அதை நிவர்த்தி செய்து செல்கிறானா என்பதை தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு மேடையில் பிரதமர் மோடி அவர்களை நீங்கள் புகழ்ந்து சொல்லி உள்ளீர்கள். அப்போ ஒருவேளை பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
பிரதமர் மோடியை புகழ்ந்ததற்கு காரணம் இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா ? இல்லையா ? என்பதை 15 நாட்களுக்கு பிறகு சொல்கிறேன் என்றால், 15 நாட்களுக்கு பிறகு தான் சொல்வேன். ஏனென்றால் எதற்கு சொன்னேன் என்றால், குக்கிராமத்தில் இருப்பவர் நமது நாட்டின் பிரதமர் அவர்களை விமர்சிக்கும் போது, வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியருக்கு அவருடைய புகழ் எந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.
வேர்ல்டு நம்பர் ஒன் பாப்புலர் லீடர் இஸ் மோடி என்று சொல்வது …யாருக்கும் மிகையாகாது…. அவர்தான் மோஸ்ட் பாப்புலர் லீடர். எதனால என்றால் அவருடைய செயல்பாடுகள். பிப்ரவரி 14-ஆம் தேதி நடக்காத ஒரு காரியம். UAE, அபுதாபியில் கோயில் கட்டுகிறார்கள். 17 ஏக்கர் கோவில் கட்டுறாங்க. மோடி அவர்கள் இருப்பதால்தான், அது நடக்குது… ஒரு இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கும் நாட்டிலேயே…
இந்து கோயில் கட்டப்படுகிறது என்று சொன்னால், அது இவர்களுடைய பரஸ்பர உறவுகள் தான். அப்ப வேர்ல்டு லெவல்ல மோடி கிரேட் லீடர். இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால், அது மோடி அவர்களால் தான. அதை நான் தைரியமாக சொல்வேன். பிஜேபியுடன் சேர்ந்து அரசியல் பயணம் செய்கிறானா ? என்பதை 15 நாட்களில் முடிவு பண்ணுவோம் நான் நேர்ல பாத்த்தை சொல்லுறேன் என கூறினார்.