
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழியிலே தாங்கள் எல்லாம் வந்தோம் என்று சொல்லிக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தினுடைய உரிமைகளை முழுமையான அளவுக்கு தாரை வார்த்து, அதன் மூலம் பிறந்த அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து…
பேரறிஞர் அண்ணா அவர்களுடைய லட்சியங்களை எல்லாம் குழி தோண்டி புதைத்து…. அண்ணா அவர்களுடைய கொள்கைகளுக்கு நேர் மாறாக ஆட்சி நடத்தி, எவ்வளவோ காலம் ஆட்சியில் இருந்தும் கூட, மாநிலத்தினுடைய உரிமையை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அதை பேணி காக்காமல்,
அந்தத் தாரை வார்த்து அதனடிப்படையில் மாநிலத்தின் உரிமைகள் எல்லாம் இன்றைய திமுக விட்டுக்கொடுத்து, ஒரு பெருத்த துரோகம் தமிழகத்திற்கு செய்துள்ளது. எனவே அண்ணாவின் பெயரை சொல்வதற்கு, பேரறிஞர் அண்ணாவின் பெயரை சொல்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்தவித தகுதியும் இல்லை.
பேரறிஞர் அண்ணாவின் உடைய திருவருடத்தை…. அவருடைய அழகிய முகத்தை கொடியிலே பதித்து, அதனுடைய அதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் சூட்டி, அண்ணா வழியிலே ஆட்சி செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். பேரறிஞர் அண்ணா வழியில் ஆட்சி செய்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்,
பேரறிஞர் அண்ணா வழியில் ஆட்சி செய்தவர் நம்முடைய மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள். எனவேதான் நம்முடைய பேரறிஞர் அண்ணா உடைய 55 ஆம் ஆண்டு நினைவு நாளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே, நம்முடைய கழகத் தோழர்கள் ஒன்று கூடி இன்னைக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் நினைவஞ்சலி இன்றைக்கு செலுத்த இருக்கின்றோம் என பேசினார்.